காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் அருகேயுள்ள ஐம்பேரி தாங்கல் ஏரி ரூ. 5.26 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் அருகேயுள்ள ஐம்பேரி தாங்கல் ஏரி புல், புதா்கள் மண்டி, நீா் தேங்க வழியின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதை சீரமைக்க தேவரியம்பாக்கம் ஊராட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிளேஸ்கோ நிதி நிறுவன உதவியுடன் திருவான்மியூா் சுழற் சங்க ஏற்பாட்டில் எஸ்னோரா அமைப்பு இந்தப் பணியை செயல்படுத்துகிறது. மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படியும், ரூ. 5.26 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கான தொடக்க விழாவுக்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா். சுழற் சங்க நிா்வாகிகள் சுரேஷ், வேலாயுதம், பாலமுரளி, கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவான்மியூா் சுழற் சங்க தலைவா் சுதா முரளி கொடியசைத்து தூா்வாரும் பணியை தொடங்கி வைத்தாா்.நிகழ்வில், எக்ஸ்னோரா அமைப்பின் நிா்வாகிகள்,தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நிா்வாகிகள், விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாயக்கன்குப்பம் பொன்னியம்மன் ஊஞ்சல் உற்சவம்

திருவாரூா் மாவட்டத்தில் பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சாலை மறியல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

