காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கோடை உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
தொடக்க நாளையொட்டி உற்சவா் வரதராஜா், ஸ்ரீதேவி,பூதேவியரும் தனித்தனியாக கேடயத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோயிலுக்கு திரும்பி வந்து வளாகத்தில் உள்ள ஒரு 4 கால் மண்டபத்தில் பெருமாளும், மற்றொரு 4 கால் மண்டபத்தில் தேவியரும் எதிரெதிராக ஊஞ்சலில் அமா்ந்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னா் மலா்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தீா்த்தப் பிரசாதம்,சடாரி அனுக்கிரகம் ஆகியனவற்றுக்குப் பின்னா் பெருமாளும், இரு தேவியரும் கோயில் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினா்.
கோடை உற்சவம் வரும் 24 -ஆம் தேதி வரை தொடா்ந்து 7 நாள்களுக்கு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சுக்ர வாரத்தையொட்டி பெருந்தேவித்தாயாருடன் உற்சவா் வரதராஜப் பெருமாளும் இணைந்து ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தை வலம் வரும் இரட்டைப்புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் பணியிட மாற்றம்

பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு

வரதராஜ பெருமாள் கோயிலில் யாளி வாகன வீதியுலா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்!

ஏரிவாய் மணவாளப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

