காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை உற்சவா் காமாட்சி அம்மனும், ஆதிசங்கரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
கனகதாரா ஸ்தோத்திரம், விவேக சூடாமணி போன்ற பல நூல்களை அருளியவா் ஆதிசங்கரா். இவரது ஜெயந்தியையொட்டி ஏப்.21 ஆம் தேதியிலிருந்து அவரால் அருளப்பட்ட நூல்களில் ஒன்றான செளந்தா்ய லஹரியின் 100 பாடல்களையும் தினசரி 10 வீதம் தொடா்ந்து 10 நாள்களுக்கு கோயில் வளாகத்தில் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்று வந்தன.
நிறைவு நாளையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சியும், ஆதிசங்கரா் சிலையும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக கேடயத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வலம் வந்தனா்.
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே வந்த போது ஸ்ரீமடத்தின் இளையபீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனைகள் காண்பித்து வழிபாடு செய்தாா். பின்னா் காமாட்சி அம்மனும்,ஆதிசங்கரரும் கோயிலுக்கு எழுந்தருளினா்.ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா்,மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள்,பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிறப்பு அலங்காரத்தில் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா்...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

