மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சித்திரை மாத ஏகாதசி: காஞ்சிபுரம் வரதராஜா் சிறப்புத் திருமஞ்சனம்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:35 am IST

சித்திரை மாத ஏகாதசி தினத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், மாலையில் உற்சவா் ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று திரும்பும் நிகழ்வும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மீண்டும் திரும்பி வந்து பெருமாள் திருமலைக்கு எழுந்தருளினாா்.

நாளை வரதராஜ பெருமாள் அவதரித்த தின விழா-

பிரம்ம தேவன் காஞ்சியில் நடத்திய அசுவ மேத யாகத்தின் முடிவில் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வரதராஜப் பெருமாள் அவதரித்தை நினைவு கூறும் விழாவாகும். இதனையொட்டி புதன்கிழமை காலையில் கோயிலிலிருந்து பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் அலங்காரமாகி மாட வீதியில் உள்ள மாளிகைக்கு எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் மாலையில் மாளிகையிலிருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.