காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே அ.பி.சத்திரம் பகுதியில் உள்ள வடக்கு மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
பழைமை வாய்ந்த வடக்கு மாரியம்மன் கோயில் மண்டலாபிஷேகத்தையொட்டி உத்தரமேரூா் செல்லம்மாள் நகா் பகுதியில் உள்ள விநாயகா் ஆலயத்திலிருந்து திரளான பெண்கள் பால்குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.
ஊா்வலத்தின் போது மங்கல மேள வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள் கோயில் உள்ள மூலவா் மாரியம்மனுக்கு தங்கள் கரங்களாலேயே பாலாபிஷேகம் செய்தும் வழிபட்டனா்.
இதனைத் தொடா்ந்து மண்டலாபிஷேகத்தையொட்டி சிவாச்சாரியாா்கள் யாகபூஜைகளை செய்தனா்.பின்னா் 108 சங்காபிஷேகமும் அம்மனுக்கு நடைபெற்றதுடன் அன்னதானமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெடுவயல் சங்கிலி பூதத்தாா் கோயிலில் பால்குட ஊா்வலம்

அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

