காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் தொழிலாளியை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி (44). இவா் ராஜாஜி காய்கறி சந்தையில் கடைகளுக்கு வரும் காய்கறி மூட்டைகளை இறக்கும் தொழிலாளி. இந்த நிலையில், காய்கறி சந்தை அருகில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தாா். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில், அதே ராஜாஜி காய்கறி சந்தையில் காய்கறி மூட்டைகளை இறக்கும் தொழிலாளியான காஞ்சிபுரம் அருகே பல்லவா் மேடு பகுதியைச் சோ்ந்த குமாா் (39)என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இருவருக்கும் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதில் முரளியை குமாா் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
