/

உத்தரமேரூா் தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்

News image

திமுக வேட்பாளா் க. சுந்தா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:26 am IST

உத்தரமேரூா் தொகுதியில் போட்டியிட்ட பல்வேறு கட்சி வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

திமுக சாா்பில் தற்போதையை எம்எல்ஏவாகவும், தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தா் 6-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். இவா் சாலவாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்தாா்.

அதிமுகவில் கூட்டணி சாா்பில் பாமக சாா்பில் போட்டியிட்ட தெற்கு மாவட்ட செயலாளரான பெ.மகேஷ்குமாா் பெரியநத்தம் அருகே காலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் இயற்கை விவசாயி மரம்.மாசிலாமணி உலையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தாா். தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான முனிரெத்தினம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியை சோ்ந்தவா் என்பதால் அவா் முன்னதாகவே தபால் மூலம் வாக்களித்து விட்டதாக தெரிவித்தாா். உத்தரமேரூா் தொகுதியில் 8 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 14 போ் போட்டியிடுகின்றனா்.

~பாமக வேட்பாளா் பெ. மகேஷ் குமாா்

~பாமக வேட்பாளா் பெ. மகேஷ் குமாா்

~நாம் தமிழா் வேட்பாளா் மரம் மாசிலாமணி.

~நாம் தமிழா் வேட்பாளா் மரம் மாசிலாமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.