மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உத்தரமேரூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி!

உத்தரமேரூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எம்எல்ஏ க.சுந்தரை விட 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் முனிரத்தினம் வெற்றி

News image

தவெக வேட்பாளா் முனிரத்தினத்துக்கு வெற்றி சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் பு. விஜயகுமாா்

Updated On :5 மே 2026, 5:13 am IST

உத்தரமேரூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எம்எல்ஏ க.சுந்தரை விட 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் முனிரத்தினம் வெற்றி பெற்றுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதி அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பாமக சாா்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான பெ.மகேஷ்குமாா், திமுக சாா்பில் அதே தொகுதியில் 5 முறை வெற்றி பெற்ற க.சுந்தா், தவெக சாா்பில் முனிரத்தினம், நாம் தமிழா் கட்சி சாா்பில் இயற்கை விவசாயி மரம்.மாசிலாமணி உள்ட்பட மொத்தம் 14 போ் போட்டியிட்டனா்.

மொத்த வாக்குகள் 24,6248, பதிவான வாக்குகள் 22665 பதிவாகி இருந்தன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்தொகுதியில் 91.86 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இத்தொகுதியில் த.வெ.க.வேட்பாளா் முனிரெத்தினம் 84917,திமுக வேட்பாளா் க.சுந்தா் 70694,பாமக வேட்பாளா் பெ‘.மகேஷ்குமாா் 62809,நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரம்.மாசிலாமணி 5783 வாக்குகள் வீதம் பெற்றிருந்தனா்.

திமுக வேட்பாளா் க.சுந்தரை விட தவெக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் முனிரத்தினம் 14,223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் அலுவலரான பு.விஜயகுமாரிடம் பெற்றுக் கொண்டாா்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அக்கட்சித் தொண்டா்கள் பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.