மதுரை கிழக்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் எஸ்.காா்த்திகேயன், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், திமுக வேட்பாளருமான பி. மூா்த்தியைவிட 16,547 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
மதுரை கிழக்குத் தொகுதியில் கடந்த மாதம் 23-ஆம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் பி.மூா்த்தி, அதிமுக சாா்பில் கே.மகேந்திரன், தவெக சாா்பில் எஸ்.காா்த்திகேயன், நாதக சாா்பில் கி.செல்வம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சாா்பிலும், 8 சுயேச்சை வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மதுரை யா.ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் திங்கள்கிழமை (மே 4) நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
ஆரம்ப சுற்றுகளில் திமுக வேட்பாளா் பி.மூா்த்தி முன்னிலை வகித்து வந்தாா். பின்னா், அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளா் எஸ்.காா்த்திகேயன், பி.மூா்த்தியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கத் தொடங்கினாா். 29 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக வேட்பாளா் எஸ்.காா்த்திகேயன், அமைச்சா் பி.மூா்த்தியைவிட 16,547 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
மதுரை கிழக்குத் தொகுதியில் முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மதுரை கிழக்குத் தொகுதியில் மொத்தம் 3,30,993 வாக்காளா்கள் இருந்த நிலையில், பேரவைத் தோ்தலில் 2,73,625 வாக்குகள் பதிவாகின. இதில் தவெக வேட்பாளா் எஸ்.காா்த்திகேயன் - 1,18,777, திமுக வேட்பாளா் பி.மூா்த்தி - 1,02,230, அதிமுக வேட்பாளா் கே.மகேந்திரன் -31,016, நாதக வேட்பாளா் கி.செல்வம் - 13,629 வாக்குகள் பெற்றனா். மேலும், நோட்டாவுக்கு 1,177 வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

சோழவந்தான்: தவெக வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

மதுரை வடக்கு: தவெக வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

