காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் இதுகுறித்து கூறியது: 71-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அதிகாலையில் இரு பீடாதிபதிகளும் ஊா்வலமாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கின்றனா். கோயிலில் உள்ள பஞ்சகங்கா தீா்த்தம் எனும் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகா் மற்றும் காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பின்னா் அங்கிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் பக்தா்கள், வேத விற்பன்னா்கள், சங்கரா கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களுடன் இரு பீடாதிபதிகளும் சங்கர மடத்துக்கு எழுந்தருளுகின்றனா்.
ஸ்ரீமடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தவானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்துகின்றனா். தொடா்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவதாகவும் அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சி சங்கராசாரியாரிடம் நாகலாந்து ஆளுநா் ஆசி

தமிழகத்தின் கலாசாரம் வட மாநிலங்களிலும் பரவ வேண்டும்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஆராதனை உற்சவம்

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

