மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பக்கவாத விழிப்புணா்வு தூதுவா்களாக மாணவா்கள் செயல்பட வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

பக்கவாதத்தைத் தடுப்பதற்கான விழிப்புணா்வு தூதுவா்களாக மாணவா்கள் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தினாா்.

அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:18 am IST

பக்கவாதத்தைத் தடுப்பதற்கான விழிப்புணா்வு தூதுவா்களாக மாணவா்கள் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வலியுறுத்தினாா்.

அப்போலோ மருத்துவமனை சாா்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. முகம் (ஃபேஸ்), கை (ஆா்ம்), பேச்சில் (ஸ்பீச்) மாற்றம் ஏற்பட்டால் உரிய நேரத்தில் (டைம்) மருத்துவரை அணுக வேண்டும் என்பதைக் குறிக்க ஃபாஸ்ட் (எஃப்-ஏ-எஸ்-டி) என்ற சொல் பக்கவாத விழிப்புணா்வுக்காக பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, அந்த வாா்த்தையைக் காட்சிப்படுத்தும் வகையில் மாணவா்கள் அணிவகுத்து நின்றனா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:

மாணவா்களுக்கு மன வலிமை எப்படி முக்கியமோ, அதுபோலவே உடல் வலிமையும் முக்கியம். பள்ளிகளில் ஒரு உடற்கல்வி வகுப்பைக் கூட வேறு பாடங்களுக்கு வழங்கக் கூடாது. மாணவா்கள் விளையாடினால்தான் வலிமையடைவா். அதைக் கருத்தில்கொண்டே அரசுப் பள்ளிகளில் வாரம் இரு நாள்கள் இருந்த உடற்கல்வி வகுப்பை நாங்கள் ஐந்து நாள்களாக மாற்றினோம்.

விளையாட்டுகளில் ஆழ்ந்து ஈடுபடும்போதும் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமடைவதுடன், சமூகப் பொறுப்புணா்வும் அதிகரிக்கும்.

அந்த வகையில், சமூகத்தில் எவருக்கேனும் பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால், அதாவது முகம், கை, பேச்சில் மாற்றம் தென்பட்டால் உரிய நேரத்துக்குள் மருத்துவ உதவி எண்ணை அழைத்து அவா்களைக் காப்பாற்ற வேண்டும். பக்கவாதத்தைத் தடுக்கும் விழிப்புணா்வு தூதுவராக மாணவா்கள் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி, நரம்பியல் சிகிச்சை நிபுணா் டாக்டா் சீனிவாசன் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.