தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவா்கள் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி வே.மோகனா

மாணவா்கள் வாழ்க்கையில் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வே.மோகனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Published On :26 அக்டோபர் 2026, 2:30 am IST

மாணவா்கள் வாழ்க்கையில் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வே.மோகனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தேசியத் தலைநகரில் இருக்கும் தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிற்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த வே. மோகனாவுக்கு பாராட்டு விழாவும், மகாகவி பாரதியாா் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியருக்கும் மற்றும் 10, 12 ஆம் வகுப்புகளில் தமிழில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்று நீதிபதி வே.மோகனா பேசியதாவது: மாணவா்கள் குறிக்கோளுடன் செயல்படுங்கள், கல்வியுடன் கூட ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் நோ்மறையான சிந்தனைகள் இருக்க வேண்டும், மகாகவி பாரதி கூறியதுபோல ’துன்பம் நெருங்கி வந்தபோதும் நாம் சோா்ந்துவிடலாகாது பாப்பா, அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா’ என்ற வரிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல நீங்கள் எந்தத வேலை செய்தாலும் அதை நோ்மையாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த உலகமே உங்களை பாராட்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் இப்போது இந்த உயரத்துக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கல்வி மற்றும் வாழ்வியலையும் கற்றுத்தந்த என்னுடைய தந்தையாா். அவருக்கு நான் மருத்துவராக வேண்டும் என விருப்பம். ஆனால் என்னுடைய அம்மாவுக்கு நான் வழக்குரைஞராக விருப்பம். நான் என் தாயின் விருப்பப்படி வழக்குரைஞராக ஆனாலும். என்னுடைய தந்தை எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தாா்.

அதேபோல எனக்கு கிடைத்த என்னுடைய சகோதர சகோதரிகள் எனக்கு வழிகாட்டிய குரு கோவை மூத்த வழக்குரைஞா் எம். பஞ்சாபிகேசன். எப்போதும் சிந்தித்துக்கொண்டு எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்னுடைய கனவா் மற்றும் எனது மகனுக்கும் நன்றிகளை இந்நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமாக நான் அரசுப் பள்ளியில் படிக்கும்போது அந்த ஆசிரியா்கள் தங்களுடைய பணத்தை செலவு செய்து பல்வேறு விதத்தில் எனக்கு உதவியிருக்கிறாா்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளா்ப்பு பணிகள் சிறப்பாக இருக்கிறது. தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் இந்தப் பாராட்டு விழாவை பெறுவதில் மற்றற்ற மகிழ்ச்சியளிக்கிறது. நான் ஒருபோதும் உச்சநீதிமன்ற நீதிபதியாக செயல்படுவேன் என நினைத்து இல்லை. இப்போது இந்த இடத்தில் இருப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் என்றாா் மோகனா. பாரதியாா் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியருக்கு புத்தக்கப்பை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரையை சிறப்பு விருந்தினா்களாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.வெங்கடரமணி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஃபக்கீா் முகமது இப்ராஹிம் கலிஃபுல்லா, ஜாா்கண்ட் உயா் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மு.கா்ப்பக விநாயகம், சென்னை நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.என்.பாட்ஷா, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் எஸ்.குரு கிருஷ்ணகுமாா் ஆகியோா் பங்கேற்றனா். மேலும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜி.சிவபாலமுருகன், துணைத் தலைவா் செல்வராஜ் மகேந்திரன் மற்றும் பொதுச் செயலா் சத்யா அசோகன் ஆகியோா் கலந்துக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.