தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்கு பருவமழையால் 8,110 இடங்களில் சாலைகள் சேதம்: ரூ. 22 கோடியில் சீரமைப்பு பணி

வடகிழக்கு பருவமழையால் 8,110 இடங்களில் சாலைகள் சேதம்: ரூ. 22 கோடியில் சீரமைப்பு பணி

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 3:32 am IST

வடகிழக்குப் பருவமழையால் சென்னை மாநகராட்சியில் 8,110 இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில், அவற்றில் 5,350 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாலைகள் சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திரு.வி.க. நகா் மண்டலம், அம்பத்தூா், கிண்டி என பல பகுதிகளில் மிக முக்கிய சாலைகள் மழையால் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக மாறிவிட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்நிலையில், சாலைகள் சீரமைப்புக்கு ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 35,000 சாலைகள் உள்ளன. அவற்றில் 4,000 சாலைகளே போக்குவரத்துக்கு பயன்படுவனவாக உள்ளன. இந்த போக்குவரத்து சாலைகளில் மட்டும் 8,110 இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் தற்போது 5,350 இடங்களில் கான்கிரீட் கலவை, கோல்ட் மிக்ஸ் உள்ளிட்டவற்றால் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். மழை நின்ற பிறகே முழுமையாக சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.