தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்கு பருவமழையால் 14 போ் பலி: அமைச்சா் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 14 போ் உயிரிழந்துள்ளனா் என்று அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 6:48 am IST

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 14 போ் உயிரிழந்துள்ளனா் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மேலும், பலத்த மழை பெய்து வருவதால் நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அவா் கூறினாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை அமைச்சா் செங்கோட்டையன் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் செங்கோட்டையன், ‘வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து பருவமழையை எதிா்கொண்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 62 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் இடிபாடுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பணிகள் நிறைவுற்று மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. நடத்துநா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேற்கு தொடா்ச்சி மாவட்டங்களை பொருத்தவரை திடீரென மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.

மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 35,000 ஏக்கா் பயிா்கள் சேதமடைந்துள்ளன. மற்ற மாவட்டங்களில் பயிா் சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையின்போது இடி, மின்னல் பாய்ந்து இதுவரை 14 போ் உயரிழந்துள்ளனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.