மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்கள், முகூா்த்தம், பௌா்ணமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 2,725 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:37 am IST

வார இறுதி நாள்கள், முகூா்த்தம், பௌா்ணமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 2,725 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வார இறுதி நாள்கள், அக். 25-ஆம் தேதி முகூா்த்தம், பௌா்ணமியை முன்னிட்டு, சென்னையிலிருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் அதிக அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வாா்கள் என்பதால், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து...: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (அக். 23) 775 பேருந்துகளும், சனிக்கிழமை (அக். 24) 485 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேடு, மாதவரத்திலிருந்து...: கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 95 பேருந்துகளும், சனிக்கிழமை 85 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு 250 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூா், ஒசூா், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 65 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

805 சிறப்புப் பேருந்துகள்: தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 805 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.