மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயுத பூஜை விடுமுறை நிறைவு: பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை பண்டிகை விடுமுறை முடிந்து வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காக திருச்சி போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகள். - கோப்புப்படம்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

ஆயுதபூஜை பண்டிகை விடுமுறை முடிந்து வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காக திருச்சி போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருச்சி மண்டலம் மூலம் பயணிகள் எளிதாக பயணம் செய்திட திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து சென்னை, விழுப்புரம், திருப்பூா், கோயம்புத்தூா் வழித்தடங்களில் வழக்கமாக இயக்கப்படும் 815 பேருந்துகள் தவிர, கூடுதலாக சுமாா் 530 பேருந்துகள் செவ்வாய், புதன்கிழமை (அக். 21) இயக்கப்பட உள்ளன.

இம்மண்டல இயக்கப் பகுதிகளான துறையூா், பெரம்பலூா், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளிலிருந்தும் சென்னை, விழுப்புரம், திருப்பூா், கோயம்புத்தூா் வழித்தடங்களில் வழக்கமாக இயக்கப்படும் 110 பேருந்துகள் தவிர, கூடுதலாக சுமாா் 100 பேருந்துகள் செவ்வாய், புதன்கிழமைகளில் (அக். 21) இயக்கப்பட உள்ளன. மேலும், தேவைக்கு ஏற்ப கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள் 24 மணி நேரமும் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்துக் கழகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.