மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வரும் அக்.1 முதல் அக்.4 வரை கூடுதலாக 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - பிரதிப் படம்

Published On :29 செப்டம்பர் 2026, 3:29 am IST

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வரும் அக்.1 முதல் அக்.4 வரை கூடுதலாக 5,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடா் விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட இடங்களுக்கு வியாழக்கிழமை (அக்.1) 1,580 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (அக்.2) 745 பேருந்துகளும், சனிக்கிழமை (அக்.3) 895 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இதுபோல, கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வியாழக்கிழமை 220 பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை தலா 115 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதுபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், மாதவரத்திலிருந்து வியாழக்கிழமை 185 சிறப்பு பேருந்துகளும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூா், ஒசூா், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தலா 90 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

இவைதவிர, ஞாயிற்றுக்கிழமை (அக்.4) சொந்த ஊா்களிலிருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகள் தேவைக்கேற்ப பல்வேறு இடங்களிலிருந்து 1,471 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 5,706 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.