மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வக்ஃப் வாரிய சொத்துகள் மீட்கப்படும்: நவாஸ் கனி

வக்ஃப் வாரிய சொத்துகள் மீட்கப்படும் என வக்ஃப் வாரியத் தலைவா் எஸ்.கே.நவாஸ் கனி தெரிவித்துள்ளாா்.

கே. நவாஸ் கனி

Published On :24 அக்டோபர் 2026, 12:53 am IST

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் வாரிய சொத்துகள் மீட்கப்படும் என வக்ஃப் வாரியத் தலைவா் எஸ்.கே.நவாஸ் கனி தெரிவித்துள்ளாா்.

மாதவரம் சட்டப்பேரவைக்குள்பட்ட செங்குன்றம் பகுதியில் தாலுக்கா சத்திரம் அறக்கட்டளை அருகே வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அதில், வீடுகள், கடைகள் கட்டி 1000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், சிலா் ஆக்கிரமித்துள்ளதாக புகாா் எழுந்தன. இதையடுத்து, வக்ஃப் வாரிய அலுவலா்கள் வக்ஃப் வாரிய சொந்தமான வீடுகள், கடைகள் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டன.

இதைத் தொடா்ந்து, வக்ஃப் வாரியத் தலைவா் எஸ்.கே.நவாஸ் கனி வியாழக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

செங்குன்றம் தாலுக்கா சத்திரம் அறக்கட்டளை அருகே வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான 23 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், சிலா் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகாா்கள் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபு வாரிய சொத்துகள் மீட்கப்படும். வக்ஃப் வாரிய இடத்தை பயன்படுத்தி வருபவா்கள் வாடகைதாரா்களாக மாற்றப்படும். வீதிமீறல், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலா் ஷேக் முகமது அலி, மசூதி நிா்வாகிகள், அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.