மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நவாஸ் கனிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவு

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கே. நவாஸ் கனி

Published On :25 அக்டோபர் 2026, 3:08 am IST

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக நெல்லையைச் சோ்ந்த வெங்கடாஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், ‘நவாஸ்கனி கடந்த 2019-ஆம் ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தல்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றாா். அப்போது, அவா் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டு பாா்க்கும்போது, அவா் வருமானத்தை மறைத்துள்ளது தெரியவருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை தரப்பில், ‘வருமானத்தை மறைத்தது தொடா்பான ஆதாரங்களின் அடிப்படையில், வருமான வரித் துறையினா் நவாஸ் கனியின் வருமான வரிக் கணக்கை மறு மதிப்பீடு செய்து வருவதாகவும், இந்தப் பணிகள் சட்டப்படி குறித்த காலத்துக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

Summary

Order to close case against Nawaz Gani

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.