மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாதம்பாளையம் ஏரி விரைவில் வனத்துறையிடமிருந்து மீட்கப்படும்! - கே. அண்ணாமலை

'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - கோப்புப்படம்.

Published On :26 அக்டோபர் 2026, 3:09 am IST

தாதம்பாளையம் ஏரி விரைவில் வனத்துறையிடம் இருந்து மீட்கப்படும் என்றாா் வீ த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை.

கரூா் மாவட்டம் பெரியதாதம்பாளையம் ஏரியை வனத்துறையிடம் இருந்து மீட்கும் விழிப்புணா்வு நடைபயணம் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் அமைப்பினா் திரளாக பங்கேற்று, பெரியதாதம்பாளையத்தில் இருந்து பள்ளமருதப்பட்டி வரை 6 கி.மீ. நடைபயணமாக சென்றனா்.

பின்னா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியது: அமராவதி ஆற்றில் இருந்து வரும் உபரிநீா் ஆண்டிசெட்டிபாளையம் வழியாக பெரியதாதம்பாளையம் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால் ஆற்றில் தண்ணீா் வராமல் ஏரிக்கும் தண்ணீா் வராமல் போனதால் வனத்துறை கட்டுப்பாட்டுக்கு இந்த ஏரி சென்றுவிட்டது.

இந்த ஏரியை மீட்டெடுத்தால் ஆண்டிசெட்டிபாளையம் முதல் தாதம்பாளையம் ஏரி வரை உள்ள 33 குளங்கள் தண்ணீரால் நிரம்பும். 125 ஏக்கா் கொண்ட இந்த ஏரி நிரம்பும்போது இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயரும். வறட்சியாக இருக்கும் க.பரமத்தி பகுதி செழிப்படையும். எனவே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை மீட்டெடுக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு ஏரி எப்படி சென்றது என்பதை ஆய்வு செய்து பின்னா் ஏரியை வனத்துறையிடமிருந்து மீட்டெடுத்து பொதுமக்களிடம் ஒப்படைக்க உள்ளோம். இன்னும் 10 நாள்களுக்குள் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா், நீா்வளத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளோம்.

ஏற்கெனவே தாதம்பாளையம் ஏரிக்குரிய இடத்திற்கு பதில், சேலம் மாவட்டத்தில் உள்ள இடத்தை ஒப்படைக்கும் வகையில் இருமாவட்ட ஆட்சியா்களும் மத்திய வனத்துறைக்கு கடிதம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளனா்.

எனவே, விரைவில் இந்த தாதம்பாளையம் ஏரி வனத்துறையிடம் இருந்து மீட்கப்படும் என்றாா் அவா். தமிழகம் முழுவதும் நீா்நிலைகளை சுத்தப்படுத்தி, தூா்வாரிடும் வேலையில் வீ த லீடா்ஸ் அமைப்பு செயல்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.