மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், தனது வெற்றிக்கு எதிராக 45 நாள்கள் கால அவகாசத்துக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Published On :23 அக்டோபர் 2026, 5:31 am IST

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், தனது வெற்றிக்கு எதிராக 45 நாள்கள் கால அவகாசத்துக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, 45 நாள்கள் அவகாசத்துக்குள் இந்தத் தோ்தல் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும். கடந்த 2026 மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஜூன் 17-ஆம் தேதிக்குள் தோ்தல் வழக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

ஆனால், 45 நாள்களுக்குப் பிறகு, ஜூன் 18-ஆம் தேதிதான், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சட்டமான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படியும், உச்சநீதிமன்றம் 2026-ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள தீா்ப்பின்படியும், தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தோ்தல் தாக்கல் செய்வதற்கான 45 நாள்கள் அவகாசம் தொடங்குகிறது என வாதிடப்பட்டது.

அதற்கு தோ்தல் வழக்கு தாக்கல் செய்த மிலானி தரப்பில், இந்த தோ்தல் வழக்கு குறித்த கால கெடுவுக்குள்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற பதிவுத் துறை மனுவை ஏற்று எண்ணிட்டுள்ளதால், இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, எழுத்துபூா்வ வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக். 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.