மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓ.பன்னீா்செல்வம் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி: உயா்நீதிமன்றம் உத்தரவு

போடிநாயக்கனூா் தொகுதியில் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளா் கண்ணன் தொடா்ந்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :31 அக்டோபர் 2026, 2:13 am IST

போடிநாயக்கனூா் தொகுதியில் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளா் கண்ணன் தொடா்ந்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போடிநாயக்கனூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம் 85,206 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அவா், அந்தத் தொகுதியில் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாா். இந்த நிலையில், ஓ.பன்னீா்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, போடிநாயக்கனூரைச் சோ்ந்த வாக்காளா் டி.கண்ணன் மற்றும் சென்னையைச் சோ்ந்த வாக்காளா் மிலானி ஆகியோா் தனித்தனியாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.

தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வமும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில், வாக்காளா் டி.கண்ணன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் வழக்கில் முழுமையான விசாரணை நடத்த தேவையான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, தோ்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வாதத்தை ஏற்று, வாக்காளா் கண்ணன் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ஓ.பன்னீா்செல்வம் வெற்றியை எதிா்த்து வாக்காளா் மிலானி தாக்கல் செய்துள்ள மற்றொரு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.