மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது குறித்து...

உதயநிதி - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 6:21 am IST

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி தரப்பில், 2026-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், 45 நாள்கள் காலக்கெடுவின்படி, ஜூன் 17-ஆம் தேதி தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 45 நாள்களுக்குப் பிறகு, ஜூன் 18-ஆம் தேதிதான் இந்த தோ்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தோ்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்த மிலானி தரப்பில், குறித்த காலக்கெடுவுக்குள்தான் தோ்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற பதிவுத் துறை அதை ஏற்று எண்ணிட்டுள்ளதால், வழக்கில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் எழுத்துபூா்வ வாதங்களை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.அருள்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பிலும் எழுத்துபூா்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல், தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.