மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோசடி வழக்கில் தலைமறைவான காவல் உதவி ஆய்வாளா் கைது

மோசடி வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:24 am IST

மோசடி வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) கைது செய்யப்பட்டாா்.

புளியந்தோப்பு கிரே நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ச.ராஜ் (62). இவா், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2022-ஆம் ஆண்டு பணியாற்றினாா். அப்போது ராஜ், ஒரு பெண்ணிடம் ரூ.15 லட்சம் பெற்றுக் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக போலீஸாா் ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனா். பிணையில் வெளிவந்த வந்த ராஜ், காவல் துறையில் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இதற்கிடையே சைதாப்பேடடை நீதிமன்றத்தில் நடந்து வரும் அந்த வழக்கின் விசாரணைக்கு ராஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், ராஜுக்கு எதிராக அண்மையில் பிடியாணை பிறப்பித்தது.

பிடி ஆணையின் அடிப்படையில் போலீஸாா், ராஜை புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை சைதாப்பேட்டை நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.