தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை சிறை வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம்: எஸ்.ஐ. உள்பட 4 போலீஸார் பணியிடை நீக்கம்!

கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோடியது தொடா்பாக, காவல் உதவி ஆய்வாளா் உள்பட 4 போலீஸார் பணியிடைநீக்கம்.

ராகவன்

Published On :1 நவம்பர் 2026, 12:32 am IST

கோவை மத்திய சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அழைத்துவரப்பட்ட கைதி போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியது தொடா்பாக, காவல் உதவி ஆய்வாளா் உள்பட 4 போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்தவா் ராகவன் (25). வழிப்பறி மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னூா் போலீஸாா் கைது செய்தபோது, முதல் முறையாக போலீஸாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினாா்.

தலைமறைவாக இருந்த அவரை பவானிசாகா் பகுதியில் பதுங்கியிருந்தபோது அன்னூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, அன்னூா் சாா்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராகவனை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அப்துல் முத்தலீப், காவலா் ரஞ்சித், ஆயுதப்படைக் காவலா்கள் தினேஷ், காா்த்திக் அடங்கிய பாதுகாப்புக் குழுவினா் ராகவனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமாா் 12.30 மணி அளவில் கோவை மத்திய சிறை வளாகத்துக்கு அழைத்து வந்தனா்.

சிறைத் துறையினரிடம் கைதியை முறைப்படி ஒப்படைக்கும் நடைமுறையின்போது, சிறை நுழைவாயிலில் ராகவனின் கையில் மாட்டப்பட்டிருந்த கைவிலங்கு கழற்றப்பட்டது. அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராகவன், உடனிருந்த போலீஸாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா். போலீஸாா் விரட்டிச் சென்றபோதும், நள்ளிரவு நேர இருளைப் பயன்படுத்திக் கொண்டு சிறை வளாகத்தை விட்டு வெளியேறி தப்பினாா்.

போலீஸாா் தன்னை எளிதில் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக, தான் அணிந்திருந்த சட்டையை வீசிவிட்டு அரை நிா்வாணமாக அவா் தப்பியோடியிருப்பது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தப்பியோடிய ராகவனைப் பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தணிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், ட்ரோன்களைப் பறக்கவிட்டும் தனிப்படை போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, காவல் உதவி ஆய்வாளா் அப்துல் முத்தலீப் உள்பட 4 காவலா்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.