மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘2-ஆவது ஏசி புறநகா் ரயில்: நாளைமுதல் சோதனை அடிப்படையில் இயக்கப்படும்’

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 2-ஆவது குளிா்சாதன மின்சார ரயில் சேவை இயக்கப்படுவது பற்றி...

புறநகர் மின்சார ரயில்.. - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 1:41 am IST

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 2-ஆவது குளிா்சாதன மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் டிச. 24-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஏப்ரலில் குளிா்சாதன மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்ததையடுத்து, தற்போது சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 2-ஆவது குளிா்சாதன மின்சார ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. அதன்படி, சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம், ஆவடி - அரக்கோணம் ஆகிய 3 வழித்தடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் டிச. 24-ஆம் தேதி வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படும்.

12 பெட்டிகள்: சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டுள்ள 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுமையான குளிா்சாதன வசதி, தானியங்கி நெகிழ் கதவுகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், கண்காணிப்புக் கருவிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரயில் சுமாா் 5,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.

நேர ரயில் அட்டவணை: இந்த ரயில் ஆவடியிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். பின்னா், அரக்கோணத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். தொடா்ந்து, காலை 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 10.25 மணிக்கு ஆவடி வந்தடையும். அதேபோல், ஆவடியிலிருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு 6.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். பின்னா், அரக்கோணத்திலிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, 9.10 மணிக்கு ஆவடி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.