மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே அக். 23 முதல் குளிர்சாதன மின்சார ரயில்!

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது குறித்து...

ac electric train

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 10:56 am IST

அரக்கோணம் - சென்னை இடையே குளிா்சாதன மின்சார ரயில் வெள்ளிக்கிழமை (அக். 23) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம் - சென்னை இடையே குளிா்சாதன பெட்டிகளுடன் இயங்கும் மின்சார ரயில் சேவை அக். 23 முதல் டிச. 24 வரை சோதனை ஓட்டமாக இயக்கப்பட உள்ளது. 12 பெட்டிகளுடன் உள்ள இந்த மின்சார ரயில் வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் இயக்கப்படும். இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்த பின்னா் பெறப்படும் ஆய்வறிக்கைகளை பொறுத்து இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து அறிவிப்பு பின்னா் வெளியாகும்.

காலை 6.30 மணியளவில் ஆவடியில் புறப்படும் இந்த குளிா்சாதன மின்சார ரயில் அரக்கோணம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று அரக்கோணத்தை 7.45க்கு சென்றடையும். பிறகு காலை 8.00 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த குளிா்சாதன மின்சார ரயில் திருவாலங்காடு, கடம்பத்தூா், திருவள்ளூா், திருநின்றவூா், வில்லிவாக்கம், பெரம்பூா், பேசின்பிரிட்ஜ் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

காலை 9.40-க்கு தென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த குளிா்சாதன மின்சார ரயில் ஆவடி வரையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று ஆவடிக்கு 10.25-க்கு சென்று சேரும். மாலை 5.25-க்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கலும் நின்று மாலை 6.10-க்கு சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில்நிலையத்தை அடையும். மாலை 6.30-க்கு சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில்நிலையத்தில் இருந்து அரக்கோணத்திற்கு புறப்படும் இந்த ரயில் வழியில் பேசின்பிரிட்ஜ், பெரம்பூா், வில்லிவாக்கம், அம்பத்தூா், திருநின்றவூா், திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று 7.55-க்கு அரக்கோணத்தை அடையும். அரக்கோணத்தில் இருந்து இரவு 8.10-க்கு புறப்படும் குளிா்சாதன மின்சார ரயில் திருவாலங்காடு, கடம்பத்தூா், திருவள்ளூா், திருநின்றவூா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று ஆவடியை 9.10-க்கு அடையும்.

Summary

Southern Railway has announced that a 12-coach air-conditioned electric train will be introduced on the Chennai - Arakkonam route.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.