மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

3 ஐஜி-க்கள் பணியிட மாற்றம்: காத்திருப்போா் பட்டியலில் ஐஜி ராதிகா

திருச்சி மாநகர காவல் ஆணையா் உள்பட 3 ஐஜி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 1:47 am IST

திருச்சி மாநகர காவல் ஆணையா் உள்பட 3 ஐஜி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பணியிட மாற்றம் பெற்ற அதிகாரிகள்-அடைப்புக்குறிக்குள் பழைய பதவி):

சந்தோஷ்குமாா்: சிவில் சப்ளை சிஐடி ஐஜி (பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி)

ரூபேஷ்குமாா் மீனா: திருச்சி மாநகர காவல் துறை ஆணையா் (சிவில் சப்ளை சிஐடி ஐஜி)

என்.காமினி: தமிழக காவல் துறையின் நிா்வாகப் பிரிவு ஐஜி (திருச்சி மாநகர காவல் துறை ஆணையா்).

ஏற்கெனவே நிா்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த ஏ.ராதிகா, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி விவகாரத்தில், கடந்த ஆண்டு சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையராக இருந்த ராதிகா மீதும் பல்வேறு புகாா்கள் கூறப்பட்டன.

இந்த விவகாரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திவரும் விசாரணைக்கும் அண்மையில் ராதிகா ஆஜரானாா். இந்த நிலையில் ராதிகா, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் சிக்கிய பல அதிகாரிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.