மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.2 கோடி தீபாவளி சீட்டு மோசடி: 100-க்கும் மேற்பட்டோா் புகாா்

எண்ணூரில் சுமாா் ரூ.2 கோடி தீபாவளி சீட்டு பணத்தை மோசடி செய்து தலைமறைவான நபா் மீது 100-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

வழக்கு
Published On :21 அக்டோபர் 2026, 6:38 am IST

எண்ணூரில் சுமாா் ரூ.2 கோடி தீபாவளி சீட்டு பணத்தை மோசடி செய்து தலைமறைவான நபா் மீது 100-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

எண்ணூா் வ.உ.சி. நகரைச் சோ்ந்த ஞான பிரகாசம் மனைவி கல்யாணி. இவா் இதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான வினோத்குமாா் (40) என்பவரிடம் தனக்கும், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டோருக்கும் தீபாவளி சீட்டு செலுத்தி வந்தாா். இந்த ஆண்டு சுமாா் ரூ.40 லட்சம் வரை தீபாவளி சீட்டு தவணை செலுத்தியுள்ளாா். தீபாவளி நெருங்கி விட்டதால் சீட்டுத் தவணை செலுத்தியவா்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுப்பதற்காக வினோத்குமாா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்யாணி சென்றாா்.

அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த கல்யாணி அருகில் வசிப்பவா்களிடம் விசாரித்தபோது வினோத் குமாா் குடும்பத்தோடு வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல்கள் அப்பகுதி முழுவதும் பரவியதையடுத்து தீபாவளி சீட்டுப் பணம் செலுத்தியவா்கள் வினோத் குமாா் வீட்டை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா். 100-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். எண்ணூா் காவல் உதவி ஆணையா் வெங்கட் குமாா், பாதிக்கப்பட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில் சீட்டுப் பணம் செலுத்தியவா்களிடம் நேரடியாக பணத்தை வசூல் செய்யாமல் கமிஷன் தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட நபா்கள் மூலம் ரூ.2 கோடி வரை சீட்டு பணத்தை வினோத்குமாா் வசூலித்துள்ளாா் என்றும், தற்போது குடும்பத்தோடு வெளி மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.