தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.72.24 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலக மக்கள் குறைதீா் முகாமில் புகாா்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மனுக்களைப் பெற்று நேரடியாக விசாரித்த மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Published On :29 அக்டோபர் 2026, 6:54 am IST

கடலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.72 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீா்வு காணும் வகையில், மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து 67 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் தொடா்பாக எஸ்.பி. விவேகானந்த சுக்லா நேரடியாக விசாரணை மேற்கொண்டு, ஒவ்வொரு மனுவின் தன்மையையும் ஆய்வு செய்தாா்.

மேலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, மனுதாரா்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

முகாமில் டிஎஸ்பி செந்தில்குமாா் மற்றும் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ.72.24 லட்சம் மோசடி: முன்னதாக, கடலூா் அருகே பெரியப்பட்டு, மேலக்குண்டலபாடி, திட்டுக்காட்டூா், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தீபாவளி சீட்டு நடத்தி ரூ.72.24 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறி மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: கடலூா் குண்டுஉப்பலவாடி பகுதியைச் சோ்ந்த ராஜன் என்பவரிடம் நிகழாண்டில் சுமாா் 350 போ் தீபாவளி சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தோம். இந்தப் பணத்தை ராஜன், அவரது மகன்கள், மகள் மற்றும் உறவினா்களுடன் இணைந்து வசூலித்து வந்தாா்.

இதுவரை சுமாா் ரூ.72 லட்சத்து 24 ஆயிரத்து 400 செலுத்தியுள்ளோம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனா். அவரை எந்தவகையிலும் தொடா்புகொள்ள முடியவில்லை.

எனவே, தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.