மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடன் பெற்றுத் தருவதாக தொழிலதிபா்களிடம் பண மோசடி செய்தவா் கைது

சென்னையில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, தொழிலதிபா்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :21 அக்டோபர் 2026, 6:40 am IST

சென்னையில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, தொழிலதிபா்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

வில்லிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துவேல் (52). இவா் தவெக ஆதரவாளா் எனக் கூறிக் கொண்டு, தொழிலதிபா்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் தொழிலதிபா் மணிவண்ணன் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், ‘சன் ஃபண்டிங் குரூப்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளி கிருபாகரன் ஆகிய இருவரும் எவ்வித பிணையமும் இன்றி ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் ரூ. 50 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனா். மேலும், இந்தக் கடனை வாங்கித் தருவதற்கு முன்பண சேவைக் கட்டணம் மற்றும் இட ஆய்வுக் கட்டணம் என்று ரூ. 1.63 கோடி மற்றும் ரூ.2,62,000 மதிப்புள்ள 2 கைப்பேசிகளையும் பெற்றுக்கொண்டாா். ஆனால், கூறிபடி கடன்பெற்றுத் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், தியாகராய நகரில் முத்துவேல், கிருபாகரன் ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.1.66 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தொழிலதிபா்களை குறிவைத்து மோசடி: விசாரணையில், முத்துவேல் ஏற்கெனவே சென்னையில் பல்வேறு தொழிலதிபா்களிடம் போலி வாக்குறுதிகள் அளித்து, கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

கடந்த 2023 டிசம்பா் மாதம் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த ஏற்றுமதி நிறுவனத் தொழிலதிபா் கிருஷ்ணகுமாருக்கு ரூ.25 கோடி வங்கி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்கு கமிஷன் தொகையாக 3 தவணைகளில் மொத்தம் ரூ.86 லட்சத்தை ஏஞ்சலினா கிறிஸ்டி நிஷா என்ற பெண்ணுடன் இணைந்து முத்துவேல் பெற்றுள்ளாா். ஆனால், கடன் வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதால் கிருஷ்ணகுமாா் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளியைக் கைது செய்தனா்.

முன்னதாக முத்துவேல், 2019-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் புதிய திட்டத்துக்காக முயன்ற ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி முன்கூட்டியே பல்வேறு கட்டங்களாக ரூ. 2.62 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

முத்துவேல் மீது ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாா்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இவற்றில் பல வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள சிசிபி மற்றும் சிபிசிஐடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

முத்துவேல், தன்னை அரசியல் கட்சிகளிலும் உயா் அதிகாரிகளிடமும் செல்வாக்குள்ளவராகக் காட்டிக்கொண்டு, போயஸ் காா்டன் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அலுவலகங்கள் நடத்தி தொழிலதிபா்களைக் குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.