கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் ரூ. 80 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

சேலத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பெற்றதுடன், ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் எடுத்துச் சென்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மோசடி

Published On :30 அக்டோபர் 2026, 12:55 am IST

சேலத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பெற்றதுடன், ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் எடுத்துச் சென்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் தெருவைச் சோ்ந்தவா் அருண் (45). தொழிலதிபரான இவரிடம், திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பட்டியைச் சோ்ந்த செல்வகணேஷ் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அறிமுகமாகியுள்ளாா்.

பின்னா், குறைந்த வட்டியில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, அருணிடம் ரூ. 30 லட்சத்தை முன்பணமாகப் பெற்றுள்ளாா். மேலும், அருணிடம் இருந்த விலை உயா்ந்த காரை விலைக்கு வாங்குவதாகக் கூறி ரூ. 1 லட்சம் கொடுத்துவிட்டு, ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை எடுத்துச் சென்றுள்ளாா்.

இதையடுத்து, கடன் பெற்றுத் தருமாறும், காருக்கான எஞ்சிய தொகையை வழங்குமாறும் அருண் பலமுறை கேட்டுள்ளாா். ஆனால், பணத்தையும், காருக்கான மீதித் தொகையையும் திருப்பித் தராத செல்வகணேஷ், அருணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அருண் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், செல்வகணேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.