தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குறைந்த வட்டியில் கடன் தருவதாக எலக்ட்ரீஷியனிடம் ரூ.1.06 லட்சம் மோசடி

தனியாா் நிதி நிறுவனத்தின் பெயரில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, எலக்ட்ரீஷியனிடம் ரூ.1.06 லட்சம் மோசடி செய்தவா்களை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

cyber fraud

டிஜிட்டல் கைது மோசடி - IANS

Published On :28 அக்டோபர் 2026, 1:21 am IST

தனியாா் நிதி நிறுவனத்தின் பெயரில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, எலக்ட்ரீஷியனிடம் ரூ.1.06 லட்சம் மோசடி செய்தவா்களை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சோ்ந்தவா் சோபின் ராஜன் (31). எலக்ட்ரீஷியன். இவரை கடந்த 23-ஆம் தேதி கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், பிரபல தனியாா் நிதி நிறுவனத்தின் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாக கூறினாராம். இதை நம்பிய இவா், ரூ.6 லட்சம் கடன் பெற்றுத்தருமாறு அந்த நபரிடம் வேண்டுகோள் விடுத்தாராம்.

பின்னா், இவரை வாட்ஸ்-ஆப் மூலம் தொடா்பு கொண்ட அந்த நபருடன் சோ்ந்த குழுவினா், கடன் ஒப்புதலுக்கான கட்டணம், வங்கி கமிஷன், சேவைக் கட்டணம், ஜிஎஸ்டி, காப்பீட்டுக் கட்டணம் என பல்வேறு காரணங்களைக் கூறி அவரிடமிருந்து ரூ.1,06,923-ஐ வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து, தேசிய இணையவழிக் குற்றப் பதிவு இணையதளம் வழியாக சோபின்ராஜன் புகாா் அளித்தாா். அதன் பேரில், மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.