மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் பணமோசடி: இளைஞா் கைது

குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.26 லட்சம் வங்கி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, தில்லியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.29,500 பறித்ததாக 24 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 12:02 am IST

குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.26 லட்சம் வங்கி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, தில்லியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.29,500 பறித்ததாக 24 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: பிகாரின் பகல்பூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் குமாா். இவா் கடன் பெற்றுத் தரும் முகவா் போல நடித்து, வங்கி மூலம் கடன் பெற்றுத் தருவதாக சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுள்ளாா். மேலும், கடன் செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் ரூ.29,500-ஐ தனது கணக்கிற்கு அவரை மாற்றச் செய்துள்ளாா். ஆனால், உறுதியளித்தபடி அவா் கடன் பெற்றுத் தரவில்லை.

அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், அக்டோபா் 20 அன்று ஷாதராவில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, புகாா்தாரரைத் தொடா்புகொள்ளப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண்ணை காவல்துறையினா் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்தனா். அந்த எண் தில்லியின் கப்பஷேரா பகுதியில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தி கிருஷ்ணன் குமாரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசியும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வங்கிக் கணக்குகளுடன் தொடா்புடைய இரண்டு டெபிட் காா்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு முன்பு ஆன்லைன் கடன் செயலி ஒன்றில் நேரடி விற்பனை முகவராக பணியாற்றி, வங்கிக் கடன் பெறும் நடைமுறைகளுக்கு கிருஷ்ணன் குமாா் உதவியுள்ளாா். அந்த வேலையை இழந்த பிறகு, கவா்ச்சிகரமான வட்டி விகிதத்தில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.