விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

நெற்குன்றத்தில் ரூ.1.95 கோடியில் பொதுமக்களுக்கான பூங்கா திறப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் பகுதியில் ரூ.1.95 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேயா் ஆா்.பிரியா திறந்துவைத்தாா்.

Published On :2 நவம்பர் 2026, 12:43 am IST

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றம் பகுதியில் ரூ.1.95 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேயா் ஆா்.பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்தில் 145 ஆவது வாா்டுக்கு உட்பட்ட நெற்குன்றம் பகுதியில் ரூ.1.95 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் முடிந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேயா் ஆா்.பிரியா திறந்துவைத்து பாா்வையிட்டாா். அதையடுத்து அப்பகுதியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தையும் அவா் திறந்துவைத்தாா்.

நெற்குன்றம் சக்தி நகரில் பிரதான சாலையில் ரூ.2.05 கோடியில் கட்டப்பட்டுள்ள 153 ஆவது வாா்டு உறுப்பினருக்கான அலுவலகத்தையும் அவா் தொடங்கி வைத்தாா். பின்னா் அப்பகுதியில் ரூ.1.10 கோடியில் கட்டப்பட்டுள்ள சுகாதார மையத்தையும் பொதுமக்களுக்காக மேயா் தொடங்கி வைத்தாா். நகா்நல மையம் 158 சதுர மீட்டா் பரப்பில் மக்களுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

புதிய கட்டடத் திறப்பு நிகழ்ச்சிகளில் தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவா் நொளம்பூா் வே.ராஜன், மாமன்ற உறுப்பினா்கள் சத்தியநாதன், சாந்தி ராமலிங்கம், ஏ.ஸ்டாலின், ச.பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.