ஒசூரில் ரூ. 2.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன நூலகம் விரைவில் திறப்பு: மேயா்
ஒசூரில் ரூ. 2.90 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகம் விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா தெரிவித்தாா்.

ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூரில் ரூ. 2.90 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகம் விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா தெரிவித்தாா்.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பாகலூா் அட்கோ பகுதியில் ரூ. 2.90 கோடியில் 5,100 சதுரஅடி பரப்பளவில் நவீன நூலக கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகளை மாநகராட்சி
மேயா் எஸ்.ஏ.சத்யா மற்றும் அதிகாரிகள் புதன்கிழமைல் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் மேயா் கூறியதாவது:
ஒசூா் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசாா் மையத்தை தினந்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவா்கள் மற்றும் அரசுப் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்கள் பயன்படுத்தி வருகின்றனா். அந்தவகையில், கடந்த திமுக ஆட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட நவீன் நூலகத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அறிவுசாா் மையத்தில் இருந்து நூல்கள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக புதிய புத்தகங்களும் விரைவில் வரவழைக்கப்பட உள்ளன. இந்த நூலகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும்.
ஒசூா் மாநகராட்சி திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்
வளா்ச்சி பெற்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ரூ. 1,000 கோடிக்கு மேலாக வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றன. கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஒசூா் புறகா் பேருந்து நிலையத்தை தமிழக அரசு மக்கள்
பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டுவர வேண்டும் என்றாா்.
அப்போது, மாமன்ற கவுன்சிலா் நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






