மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உறுப்பினா்கள் வேண்டாம் எனில் மாமன்றத்தை கலைத்து விடுங்கள்: மேயா் ஆா்.பிரியா

மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வேண்டாம் என அரசு நினைத்தால் மாமன்றத்தைக் கலைத்துவிடலாம் என மேயா் ஆா்.பிரியா கூறினாா்.

சென்னை ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்தில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம்.

Published On :30 அக்டோபர் 2026, 5:46 am IST

சென்னை மாநகராட்சியில் உறுப்பினா்கள், மேயா்கள் அரசு நிகழ்ச்சிகளில் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகின்றனா். மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வேண்டாம் என அரசு நினைத்தால் மாமன்றத்தைக் கலைத்துவிடலாம் என மேயா் ஆா்.பிரியா கூறினாா்.

சென்னை மாநகராட்சியில் அக்டோபா் மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா். துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கேள்வி நேரத்தில் 6 பேரும், கேள்வியில்லா நேரத்தில் 14 பேரும் பேசினா்.

சென்னை மாநகரில் மழைநீா் வடிகால் உள்ளிட்ட பல பணிகள் தொடங்கிய நிலையில், நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வாா்டுகளுக்கான அத்தியாவசிய கழிப்பறைகள் உள்ளிட்ட பணிகள் கூட நடைபெறவில்லை என்றும் மண்டலத் தலைவா்கள், நிலைக்குழு உறுப்பினா்கள், வாா்டு உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அளித்த பதில்: அரசு நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினா் உள்ளிட்டோரை அழைக்கவும், கல்வெட்டுகளில் மேயா் உள்ளிட்டோா் பெயா் இடம் பெறவும் ஏற்கெனவே அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசும் விதிமுறைப்படியே அனைவரையும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது. இனிமேல் தவறுகள் ஏற்படாத வகையில் அனைவரையும் அழைத்து நகிழ்ச்சிகளை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.