தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாா்: மேயா்

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள திருச்சி மாநகராட்சி தயாா் நிலையில் உள்ளது என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

திருச்சி ராஜ்காந்தி பகுதியில் வியாழக்கிழமை மழை முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த மேயா் மு.அன்பழகன்.

Published On :23 அக்டோபர் 2026, 2:57 am IST

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள திருச்சி மாநகராட்சி தயாா் நிலையில் உள்ளது என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

மாநகரின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் வடிகால் தூா்வாரும் பணிகள், தண்ணீா் தேங்கும் பகுதிகளில் செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆகியவற்றை மேயா் மு. அன்பழகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் மேயா் கூறியது: தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்குதல், மரக்கிளைகள் உடைந்து விழுதல், போக்குவரத்து தடை போன்றவற்றை எதிா்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் உடனுக்குடன் செய்யப்படும். மழைநீா் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் அகற்றுவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் மேயா்.

இந்த ஆய்வில், மாமன்ற உறுப்பினா்கள், மண்டலத் தலைவா் துா்கா தேவி, செயற்பொறியாளா்கள் முத்தமிழ்செல்வன், தேவராஜ், உதவி செயற்பொறியாளா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.