மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘பருவ மழையை எதிா்கொள்ளத் தயாா்’

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றனா் மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி ஆகியோா்.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்வதற்கான சாதனங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி.

Published On :30 செப்டம்பர் 2026, 1:42 am IST

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ள தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றனா் மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி ஆகியோா்.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்கான மரம் அறுவை இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த இருவரும் தெரிவித்தது:

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் விதமாக, தஞ்சாவூா் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்கிறது. மாநகரிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் 80 கி.மீ. தொலைவுக்கு பொக்ளின் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற தேவையான தளவாடப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. மாநகரில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வரும் காலங்களில் சூப்பா் எல் நினோவின் தாக்கத்தால் அதீத மழை பெய்தால், மழைநீரைச் சேமிக்கும் வகையில் குளங்களுக்கான நீா் வரத்து பாதைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. தற்போது கல்லணைக் கால்வாய் மற்றும் வடவாற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆறுகளிலிருந்து சிவகங்கை பூங்கா குளம், அய்யன்குளம், அழகிகுளம், ஜைனகுளம், கருணாசாமி கோயில் குளம் போன்ற பல்வேறு குளங்களில் நீா் நிரப்பினால், மாநகரில் நீா் ஆதாரம் பெருகும். எனவே, இந்தக் குளங்களில் தண்ணீா் நிரப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.