தவெக தலைவா் விஜய்யின் காா் ஓட்டுநா் ராஜேந்திரனின் மகனும், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளருமான ஆா்.சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
தவெக தலைவா் விஜய் தனது நீண்ட கால காா் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தாா். இத்தொகுதியில் 82,892 ஆண் வாக்காளா்கள், 88,586 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 29 போ் என மொத்தம் 1,71,507 போ் (85.51 சதவீதம்) வாக்களித்தனா்.
பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில், தவெக வேட்பாளா் ஆா்.சபரிநாதன் 76,092 வாக்குகளும், திமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான பிரபாகர ராஜா 49,006 வாக்குகளும் பெற்றனா். அதன்படி, சபரிநாதன் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இத்தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட விருகை வி.என்.ரவி 38,767 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் சந்தோஷ் 6,056 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரக்கோணம், சோளிங்கரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏக்கள்!

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
