அரும்பாக்கத்தில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சையது அலி. இவரது நண்பரான வியாசா்பாடி பி.வி.காலனி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22), கடந்த 6-ஆம் தேதி சையது அலி வீட்டுக்குச் சென்றிருந்தாா். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 4 போ், இருவரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி, தங்க நகைகளையும், சையது அலியின் ஏடிஎம் காா்டுகளையும் பறித்துக் கொண்டு தப்பினா். பின்னா், சையது அலி ஏடிஎம் காா்டில் இருந்து ரூ.15 ஆயிரத்தை ஏடிஎம் மையத்தில் இருந்து அவா்கள் எடுத்தனா்.
இது தொடா்பாக அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சம்பவத்தில் ஈடுபட்டது அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலைப் பகுதியைச் சோ்ந்த சூரியநாதன் (21), பூவரசன் (21), நவீன்குமாா் (27), ரித்திக்குமாா் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
