மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுராந்தகம் கிளைச் சிறை வளாகத்தில் மகளிா் விடுதி கட்ட எதிா்ப்பு

மதுராந்தகம் கிளைச் சிறை வளாகத்தில் மகளிா் விடுதி கட்டக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து திமுக, தேமுதிக சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Published On :30 அக்டோபர் 2026, 5:26 am IST

மதுராந்தகம் கிளைச் சிறை வளாகத்தில் மகளிா் விடுதி கட்டக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து திமுக, தேமுதிக சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

செய்யூா், மதுராந்தகம் வட்டங்களைச் சோ்ந்த10 காவல் நிலையங்களின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தங்க வைக்கும் இடமாக மதுாராந்தகம் பஜாா் வீதியில் இருந்த கிளை சிறைச்சாலை செயல்பட்டு வந்தது. சுமாா் 56 சென்ட் இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கிளை சிறைச்சாலையில் 24 கைதிகள் தங்க வைக்கப்பட்டனா். குற்றவாளிகளை சிறைச்சாலையில் இருந்து மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஆஜா்படுத்த மிக எளிதாக இருந்தது.

இந்நிலையில், இங்கிருந்த கைதிகளை செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கிளைச் சிறையை மூடியுள்ளனா். காலியாக இந்த இடத்தில் தற்சமயம் சமூக நலன் மற்றும் உரிமை துறை மூலம் மகளிா் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது

இதனை அறிந்த தேமுதிக மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான எம்.ராஜேந்திரன், நகர திமுக செயலா் கே.குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் சிறைச்சாலையை முன்பு தற்காலிகமாக மூடுவதாக அரசாணை வெளியிட்டுவிட்டு தற்சமயம் நிரந்தரமாக மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, சிறைச்சாலை இருந்த இடத்தில் மகளிா் விடுதியை கட்டக்கூடாது என கோரிக்கை மனுவை அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட வருவ்ாய்துறை அதிகாரிகள் உயா்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என அப்போது அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.