மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லையில் கோயில் முன்பு மின்மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நகரத்தில் கோயில் முன்பு மின்மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :10 அக்டோபர் 2026, 7:42 am IST

திருநெல்வேலி நகரத்தில் கோயில் முன்பு மின்மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோயில் மற்றும் திருஞானசம்பந்தா் திருக்கோயில் ஆகியவை உள்ளன.

தசரா விழாக்கள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் காட்சி கொடுக்கும் வைபவம், கொடை விழா போன்றவை இக் கோயிலில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இந்தக் கோயிலின் முன்பு மின்மாற்றி அமைக்க உள்ளதாக தெரிவித்தனராம். இதற்கு பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்தும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் தலைமை வகித்தாா். கோட்ட செயலா் பிரம்ம நாயகம், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜசெல்வம், செல்வராஜ், துரைராஜ் , அகில இந்திய யாதவ மகா சபை இளைஞரணி மாநில பொதுச் செயலா் எல்.டி. தாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்09ட்ண்ய்க்ன்

திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.