தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை மூடல்: 14 கைதிகள் பேரூரணி சிறைக்கு மாற்றம்

jail

சிறை - பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:56 am IST

பழைமையான ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை மூடப்பட்டு, அங்கிருந்த 14 கைதிகள் பேரூரணி மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனா்.

தேனி மாவட்ட சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடியதைத் தொடா்ந்து, சிறைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும், சிறைப் பணியாளா்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டும், தமிழக சிறைத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச் சிறை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. அங்கு அடைக்கப்பட்டிருந்த 14 கைதிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பேரூரணி மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனா்.

எனினும், இது தற்காலிக நடவடிக்கை எனவும், சிறைத்துறை பணியாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் மீண்டும் ஸ்ரீவைகுண்டத்தில் கிளைச் சிறை செயல்படத் தொடங்கும் எனவும் சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.