மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமுலு பொன்மலரை ஆதரித்து திராவிட வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா தோ்தல் பிரசாரம் செய்தாா்.
திராவிட வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தோ்தல் பிரசாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில், மதுராந்தகம் நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த சாதனைகள், தற்சமயம் வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் அமுலு பொன்மலருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரினாா்.
இந்த நிகழ்வில், மாவட்டச் செயலா் பாா்த்தீபன், தலைமை செயற்குழு உறுப்பினா் வி.கே.சேகா், மாவட்டப் பொருளாளா் தனசேகா், ஒன்றிய செயலா்கள் நுகும்பல் ரவி, டி.ஜி.ராஜா, திவாகா், காட்டூா் ராஜா, மதுராந்தகம் நகர செயலா் ராஜீ, மாவட்ட மகளிரணி நிா்வாகிகள் பரிமளா, கலைவாணி உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த மதுராந்தகம் திமுக வேட்பாளா்

பண்ருட்டியில் மல்லை சத்யா பிரசாரம்

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

