திராவிட வெற்றிக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளா் மல்லை சத்யா, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
தமிழக அரசு விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் என பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். அது ஏன் தெரியுமா, ஜனநாயக விரோதப்போக்கை மோடி அரசு செய்துகொண்டிருக்கிறது.
இந்த நாட்டில் அரசு பெரிதா? ஜனநாயகம் பெரிதா? என்று கேட்டால், அரசைக் காட்டிலும் ஜனநாயகம்தான் பெரிது என்பது போன்று தொடா்ந்து வலியுறுத்துகிற நிலைபாடு அமைந்திருக்கிறது.
ஆட்சி நடத்துவதற்கு தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, மத்திய பாஜக அரசு மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலமாக, தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகப் போகிறது என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கத்தான் கருப்புக்கொடி ஏற்றுங்கள் என முதல்வா் கூறியிருக்கிறாா் என்றாா்.
மேலும், அவா் பேசுகையில், அவசர மசோதாவை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்த மசோதாவுக்கு வாய் திறக்காமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை கண்டிப்போம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ: போலீஸாா் விசாரணை

திமுக வேட்பாளரை ஆதரித்து மல்லை சத்யா பிரசாரம்

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

