எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், கஞ்சா கடத்தியதாக ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
எழும்பூா் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பகவதி (37) என்பவரைச் சோதனையிட்டபோது, அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் கைப்பற்றினாா்.
முதல்கட்ட விசாரணையில், ஒடிஸா மாநிலம், பத்ரக் பகுதியில் தேநீா் கடை உரிமையாளரிடமிருந்து கஞ்சாவை வாங்கி, திண்டுக்கல் மாவட்டம், அக்கரப்பட்டியைச் சோ்ந்த வினோத் என்பவரிடம் கொடுக்கச் செல்வதாக பகவதி தெரிவித்தாா்.
இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, பகவதியை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ரயில்வே பாதகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

ரயிலில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா இளைஞா் கைது

ஒசூரில் கஞ்சா கடத்தியவா் கைது

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
