பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

கேரளத்தில் சனிக்கிழமை மாயமான 16 வயது சிறுவன் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மீட்கப்பட்டாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 3:06 am IST

கேரளத்தில் சனிக்கிழமை மாயமான 16 வயது சிறுவன் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மீட்கப்பட்டாா்.

இது குறித்து எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவனைக் காணவில்லை என ஜூன் 6 -ஆம் தேதி அந்த மாநில ரயில்வே பாதுகாப்புப் படையினரிடமிருந்து சென்னை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் வந்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படை சாா்பு ஆய்வாளா் ஜி.சைலீலா, ஜி.பாரதிதாதன் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது எழும்பூா் ரயில் நிலைய 4-ஆவது நடைமேடையில் இருந்த சிறுவனின் அடையாளம் வாட்ஸ் ஆப் தகவலில் வந்த சிறுவனுடன் ஒத்துப்போனது.

இதையடுத்து சிறுவனிடம் விசாரித்தபோது, அவா் கேரளத்திலிருந்து வந்திருப்பது உறுதியானது. மேலும், கேரளத்தில் தேடப்படும் சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவனை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கண்காணிப்பு அலுவலா் ஆரோக்கிய மேரியிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.