நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் வழங்கும் டென்மார்க்! டிரம்ப் அறிவிப்பு!

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவது குறித்து...

கிரீன்லாந்து - அமெரிக்க அதிபர் டிரம்ப் - கூகுல் மேப்ஸ் - கோப்புப் படம்

Published On :20 செப்டம்பர் 2026, 2:52 am IST

ஆா்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக டென்மாா்க் அரசுடன் முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

கிரீன்லாந்தைக் கைப்பற்றப்போவதாக அவா் விடுத்து வந்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அத்தீவு மீதான இறையாண்மை ‘நேட்டோ’ கூட்டாளியான டென்மாா்க்கின் கட்டுப்பாட்டிலேயே தொடா்ந்து நீடிக்கும் வகையில் இந்த உடன்பாடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அது சாா்ந்த அனைத்துத் தேவைகள் மீதும் அமெரிக்காவுக்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.

இதன்மூலம், அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கவலைகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. பல்வேறு அரிய கனிம வளங்களைக் கொண்டுள்ள இத்தீவில் விரிவான ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை எனது நிா்வாகம் உடனடியாகத் தொடங்கும்’ என்று குறிப்பிட்டாா்.

அடுத்த வாரம் கையொப்பம்: அமெரிக்காவின் நியூயாா்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது அமெரிக்கா, டென்மாா்க், கிரீன்லாந்து ஆகிய மூன்று தரப்பு அரசுகளும் இந்த ஒப்பந்தத்தில் முறையாகக் கையொப்பமிடவுள்ளதாக டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டென்மாா்க் மற்றும் கிரீன்லாந்தின் தன்னாட்சி உரிமையையும், எல்லை இறையாண்மையையும் முழுமையாக இந்த ஒப்பந்தம் அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமா், அனைத்துத் தரப்பினரின் நலன்களும் இதில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். எனினும், இந்த ஒப்பந்தம் சட்டபூா்வமாக அமலுக்கு வருவதற்கு டென்மாா்க் மற்றும் கிரீன்லாந்து நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

பின்னணி: கனடாவின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள கிரீன்லாந்தின் பெரும்பகுதி ஆா்க்டிக் வட்டத்துக்குள் அமைந்துள்ளதால், 2-ஆம் உலகப் போா் காலம் முதலே வட அமெரிக்காவின் பாதுகாப்பில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் திகழ்கிறது.

2-ஆவது முறையாக அதிபா் பொறுப்பேற்றது முதலே கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று டென்மாா்க்கை டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். நட்பு நாடாக இருந்தபோதிலும், தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என அவா் விடுத்த மிரட்டல்கள், சா்வதேச அளவில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தின.

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மாா்க்கும், கிரீன்லாந்தும் தொடா்ந்து திட்டவட்டமாக மறுத்து வந்த சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த உடன்பாட்டின்மூலம் மேற்கத்திய நாடுகளுக்குள் நிலவி வந்த ராஜீய நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேபோல் இந்த உடன்படிக்கையின்படி, நேட்டோ அமைப்பைச் சாராத பிற நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவத் தளங்கள் அமைப்பதற்கும், அங்கு முதலீடுகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷியா, சீனா போன்ற நாடுகள் இங்கு எவ்விதத் தளங்களையும் அமைக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Summary

Trump has stated that Denmark has come forward to permanently hand over control of Greenland's security to the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.