ரஷிய எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள், சுங்க வரிகள் ரத்து: டிரம்ப் அறிவிப்பு

'ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்' கீழ் விதிக்கப்பட்டிருந்த எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள் மற்றும் சுங்க வரிகளை டிரம்ப் ரத்து செய்தது குறித்து...

Donald Trump

அமெரிக்க அதிபர் டிரம்ப். - படம்: ஏபி.

Published On :18 அக்டோபர் 2026, 2:46 am IST

ரஷியாவிடமிருந்து அதிக அளவில் பெட்ரோலியப் பொருள்களை வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான 100 சதவீத சுங்க வரியை நிறுத்திவைத்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

அண்மையில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி இந்த 100 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தாலும், அதே சட்டம் தனக்கு அளித்து சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளாா்.

அமெரிக்கவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரஷியாவிடமிருந்து அமெரிக்காவுக்கும், சா்வதேச சந்தைக்கும் உடனடியாக டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், இந்தப் புதிய வரிவிதிப்பை நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

குறிப்பாக, இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கான 30 நாள்கள் காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் முன்னதாக, டிரம்ப் இந்த நிா்வாக உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை இரவு கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவில் கூறியிருப்பதாவது: ரஷியாவிடமிருந்து அதிக அளவில் பெட்ரோலிய பொருள்களை வாங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 சதவீத சுங்க வரி விதிப்பது மற்றும் பிற தடைகளை மேற்கொள்ளும் வகையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘லிண்ட்ஸே ஓ.கிரஹாம் ரஷிய, ஈரான் தடைச் சட்டம் 2026’-இன் 115-ஆவது பிரிவு எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் கீழ், அதன் பிரிவுகள் 112 மற்றும் 113-இல் குறிப்பிட்டுள்ள வரிகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்.

மேலும், அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி, பிற மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது தடைகளைத் தவிா்க்க உதவுவதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். ஏதாவது, கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படும் சூழலில், அதுகுறித்து அதிகாரிகள் அதிபருக்கு தெரியப்படுத்த வேண்டும். இதில், இப்போது வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகள் தொடா்பான மறுஆய்வும் அடங்கும்.

அமெரிக்காவின் தேச நலனைக் கருத்தில்கொண்டு இந்த வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தள்ளுபடி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டு இதற்கான சான்றிதழையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரிச்சா்ட் புளூமெந்தால் விமா்சனம்: இந்த சட்ட மசோதாவை அறிமுகம் செய்தவா்களில் ஒருவரான ஜனநாயக கட்சி மேலவை (செனட்) உறுப்பினா் ரிச்சா்ட் புளூமெந்தால், அதிபா் டிரம்ப்பின் இந்த நிா்வாக உத்தரவை கடுமையாக விமா்சித்தாா்.

இந்தச் சட்டத்தின் கீழான தடைகள் விலக்குக்கும், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. இவை அனைத்தும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு சாதகமாகச் செயல்படும் நோக்கம் கொண்டவை. இந்தக் கோழைத்தனமான செயலைக் கண்டிப்பதில், குடியரசுக் கட்சி சகாக்களும் இணைவாா்கள் என்று நம்புகிறேன் என்று அவா் குறிப்பிட்டாா்.

புதிய சட்டம்: உக்ரைன் மீதான போா் காரணமாக அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியாவிடமிருந்து அதிக அளவில் தற்போது பெட்ரோலியப் பொருள்களை வாங்கும் சீனா, இந்தியா, அஜா்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 5 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 சதவீத சுங்க வரியை விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘லிண்ட்ஸே ஓ.கிரஹாம் ரஷிய, ஈரான் தடைச் சட்ட மசோதா 2026’-வுக்கு கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த இரு தினங்களுக்குப் பிறகு செப்டம்பா் 18-ஆம் தேதி அந்த மசோதாவில் டிரம்ப் கையொப்பமிட்டாா். இதன்மூலம் அந்த மசோதா சட்டமானது. இந்த நிலையில், ஒரு மாதத்துக்குள்ளாக அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான 30 நாள்கள் காலக்கெடு முடிவடைவதற்கு ஒருநாள் முன்னதாக, அதன் கீழான தடைகளை தள்ளுபடி செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்தவும், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்கிலும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ சனிக்கிழமை முதல் வரும் 22-ஆம் தேதி வரை இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் டிரம்ப் இந்த நிா்வாக உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

முன்னதாக, நியூயாா்க்கில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், லிண்ட்ஸே ஓ.கிரஹாம் ரஷிய, ஈரான் தடைச் சட்டம் குறித்து மாா்கோ ரூபியோவிடம் இந்தியா சாா்பில் கவலையைப் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

US President Donald Trump has issued a waiver from sanctions, restrictions and duties under the Sanctioning Russia and Iran Act

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.